கவிதைச்சோலை!
எங்கும் இன்பம் பொங்கட்டும்!அலைபாயும் எண்ணங்களைஆசுவாசப்படுத்திக் கொள்ளவடிகாலாய் வாய்த்தது தான்திண்ணைப் பேச்சென்பதைஎன்றோ மறந்தோம்!உழைத்துக் களைத்த வேளைகளில்உறவுகள் சூழ்ந்திடஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்தபொழுதுகளை எல்லாம்தொலைக்காட்சி, கணினிக்கு பின்தொலைத்தோம்!ஒரு நொடி துக்கம்மறுநொடி சிரிப்புவரும் நொடி எதிர்பார்ப்பு...கைபேசியும், வலைதளமும்நம்மைக் கடத்திப் போவதால்எந்த நிகழ்வையும்மனதில் இருத்திப் பார்க்கும்தகைமையை இழந்தோம்!இன்றைய நாகரிகத்தின் பொருள்ஆடம்பரம்எழுதாச் சட்டமாகிநேர்மையையும், உழைப்பின்மேன்மையையும்காலாவதியாக்கிகசங்காமல் காசு பணம் சேர்ப்பதில்முனைப்பாய் இருக்கிறோம்!இருப்பதை வைத்துஆனந்தம் காணும்வாழ்வின் நெறி மறந்துபேராசை நெருப்பில்போதுமென்ற குணத்தைப் போட்டுபொசுக்கி குளிர் காய்கிறோம்...நேசத்தை வெளிப்படுத்த வழியற்றஅவசர உலகில்சுகமென்பது ஒருபோதும்வரமாய் வாய்ப்பதில்லை...மனிதத்தை இழந்து தொடரும்நம் பயணத்தில்வாழ்க்கை வசப்படுவதில்லைபகிர்வும், பாசமும், அரவணைப்பும்பண்பாட்டின் அடித்தளமெனஉயர்த்திச் சொல்வோம்!உள்ளங்களால் உயர்ந்த சமூகமேநாகரிக வளர்ச்சியின்அடையாளமென வரலாறு பேசட்டும்...வாழ்க்கை முழுவதும்என்றும் இன்பம் பொங்கட்டும்!— ரத்தினமூர்த்தி, திருப்பூர்.