கவிதைச்சோலை!
ஆரம்பம்!* ஆசிரியர் அடித்தால்மனம் உடைந்துவிஷம் குடிக்கிறான்ஒரு மாணவன்...* கல்லூரி போகுமுன்னேகாதல் வலையில் வீழ்ந்துதூக்குக் கயிற்றைதேடுகிறாள் ஒரு மாணவி!* கள்ளக்காதல் வெளியில்தெரிந்தவுடன் மானம் காக்ககடலில் குதிக்கிறதுஒரு ஜோடி!* மேலதிகாரி கொடுமையைஎதிர்க்கத் துணிவின்றிரயில் முன் பாய்ந்துஉயிரை விடுகிறார்ஒரு நேர்மையான அதிகாரி!* கட்சித் தலைவர்களுக்குதண்டனை என்றால் தலையில்பெட்ரோல் ஊற்றிக் கொள்கிறார்ஒரு தொண்டர்!* வயிற்று வலிகடன் தொல்லை தாங்காமல்உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் பலர்!* அவர்களுக்குத் தெரியாதுமரணம் என்பது முடிவல்ல...அவர்கள்செயலை தூற்றி பிறக்கப்போகும்அவப்பெயரின் ஆரம்பம் என்று!— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.