கவிதைச்சோலை
மன்னித்துவிடுங்கள் மகாத்மாவே!மகாத்மாவே...கண்ணியம், மார்க்கமற்றகனவான்கள் விமர்சனம்செய்வதால் நின் மாண்புமழுங்கப் போவதில்லை!விமர்சித்தோர் கண்டிக்கப்படலாம்விழா எடுத்து உம்மை வாழ்த்தும்நாங்கள் மட்டும் விசேஷமானவர்களா?சத்திய சோதனையை நாங்கள்காட்சிப் பொருளாக்கினோம்வாழ்க்கையின் வாசலாக்கவில்லை!தங்களின் பாத சுவட்டைபின்தொடர்ந்து வாழவில்லைதங்கள் பாதுகையைபேழையில் பாதுகாத்து மகிழ்ந்தோம்!கைராட்டை சுற்றியேஅந்நிய ஆட்சியைசுழற்றியடித்த மனோதிடத்தைநாங்கள் கற்கவில்லை!ஆடம்பரத்தில் எங்களின்அடையாளத்தை இழந்த போதும்அண்ணல் உந்தன் எளிமையின்அருமையை உணரவில்லை!நீரருந்த மறந்தாலும்மதுவருந்த மறக்காததால் - குடும்பவேரறுந்து போகுமென்றாலும்மாற்றிக் கொள்ள மனமில்லாதோர்எங்களின் மக்கள்!மதுவுக்கெதிரான உன் வேள்வியைமறந்தோம், மறுத்தோம்ஆகவே...விளம்பர வெறியில் உம்மைவிமர்சித்தவர்கள் மட்டுமல்லநாங்களும் குற்றவாளிகள் தான்மகாத்மாவே மன்னியுங்கள்!— கதிர் நிலவன், சென்னை