கவிதைச்சோலை!
இந்த மண்ணில் இன்னும் எத்தனையோ.... எடுத்ததை தானேகொடுக்கிறான் என்றுவியாக்கியானம் பேசிவிவரமாக பணம் வாங்குவோம்!எவன் தான் நல்லவன் என்றுஎகத்தாளம் செய்துஊழல் தலைவனுக்கேஓட்டு போடுவோம்!தண்ணீர் வரலைரோடு சரியில்லை - அதனால் என்ன...விலையில்லா இலவசங்கள்வீட்டில் இருக்கிறதே!ஆண்டுதோறும் விலைவாசி உயரும்கவலையில்லை வாக்காளர்களே...தேர்தல்தோறும் கொள்ளையர்கள்கூடுதலாக பணம் கொடுப்பர்!பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைபெற்றுவிட்ட தமிழர்களே...இன்னும் எத்தனையோ தேர்தல்கவலையில்லை விலைபோக!— சி.கலாதம்பி, சென்னை.