உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வேறென்ன இருக்கப் போகிறது?* மூடநம்பிக்கையை கைவிடுங்கள் என்றால்கலாசாரத்தை எப்படிகைவிட முடியும் என்பீர்கள்!* பேராசையை குறையுங்கள் என்றால்வசதியாய் வாழ்வதில்தவறென்ன என்பீர்கள்!* குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என்றால்வாய்ப்பை பயன்படுத்தினால் தானேவளமை வரும் என்பீர்கள்!* ஏமாற்றி பிழைக்காதீர்கள் என்றால்அது ஏமாளிகளின்தவறு தானே என்பீர்கள்!* பிறர் பொருளுக்குஆசைப்படாதீர்கள் என்றால்வலியவன் தானே வாழ முடியும் என்பீர்கள்!* பொய் புரட்டு செய்யாதீர்கள் என்றால்எல்லாரும் நல்லவரா என்றுஎதிர்கேள்வி கேட்பீர்கள்!* இத்தனைக்கும் பிறகும்பிறரிடம் நீங்கள்காட்டுவதாக சொல்லிக் கொள்ளும்மனிதாபிமானத்தில்உங்கள் சுய அபிமானத்தை தவிரவேறென்ன இருக்கப் போகிறது!— கீர்த்தி, கொளத்தூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !