கவிதைச்சோலை!
உதிர்வது மலர்வதற்குத்தான்!சவம் சென்ற சாலை...சிதறிக் கிடந்தபூக்களின்முணுமுணுப்பைஎந்த கால்களும் கேட்கவில்லை...யாரோ இறந்ததற்குஎங்களை ஏன்கொன்றீர்கள் என்பதை!உங்களுக்கு மணமானாலும் நீங்கள் பிணமானாலும்நோயானாலும், குணமானாலும்ரணமாவது நாங்கள் தான்!பாலியல்தொழிலாளியின்தலையில்அழகாகிறோம்!அரசியல்வாதியின்கழுத்தில்அழுக்காகிறோம்!எங்கள் வர்ணங்கள்வேறு என்றாலும் அதில்ஜாதி கிடையாதுஎங்கள் நறுமணம்நூறு என்றாலும் அதில்போலி கிடையாது!எங்களை மதிக்காமல்மிதிப்பவர்களே...நீங்கள் இறந்தால் மீண்டும்பிறப்பதில்லை!நாங்கள் உதிர்வதேமலர்வதற்குத்தான்!— நிஷாத் பானு, சென்னை.