கவிதைச்சோலை!
உன்னத உழைப்பாளர்கள்வெறும் பாறாங்கற்களாகவும்கூழாங்கற்களாகவும்சிதறிக் கிடந்த இவ்வுலகம்சிங்காரச் சிற்பங்களாகசெதுக்கப்பட்டிருக்கிறது...உழைப்பாளர்களின் கைவண்ணத்தில்!இந்த பூமியின் அழகைஒவ்வொரு நாளும் புதுப்பிக்கபுத்தம் புது வடிவங்களைபுணரமைப்பவர்கள்...உழைப்பாளர்கள்!நாடி நரம்புகள் முறுக்கேறிஉழைப்பின் வெப்பம்உந்தித் தள்ளவியர்வை முத்துக்கள்உடல் பொங்கி சிதறிநிலத்தில் வீழ்ந்திட...உழைத்துச் சிறப்பவர்கள்உழைப்பாளர்கள்!உழைப்பு இல்லையேல்உலகம் இல்லை...உழைப்பு ஒன்றேஉலகின் எல்லை!வறுமை, வறட்சியை விரட்டியடிக்கதொழிற்புரட்சிக்கு வித்திட்டுபசுமை புரட்சிக்குபாலம் அமைத்தவர்கள்உழைப்பாளர்கள்!உழைத்தால் உயரலாம் என்றனர்உண்மை தான்எவரெவரோ உழைக்கயார் யாரோ உயருகின்றனர்!உழைத்தவர்கள் களைத்து நிற்பர்உழைக்காமலேயேசிலர் கொழுத்து நிற்பர்!உழைப்பாளர்களின்அழியாத சொத்துஉழைப்பு மட்டும் தான்!உலகை உயர்த்துபவைஉழைப்பின் சிறகுகள்...உழைப்பாளர்களின் கரங்களேஉலகில் உயர்ந்தவை!உழைப்பாளர்களின் நிலைஉயரட்டும்...உலக மக்கள் வாழ்வுமலர்ந்து மணம் வீசட்டும்!— சு.ப.செல்வராசு, தேனி.