கவிதைச்சோலை!
சுயம் தொலைத்தவளே!ரத்தத்தை அமுதாக்கிகருவறையில்பாரம் சுமந்துஉன் வேதனையில்என்னை வெளிக்காற்றைசுவாசிக்க வைத்தவளே...ஊன் தந்தாய்உதிரம் தந்தாய்உயிர் தந்தாய்நானே உன் உலகம்என்று ஆனந்தப்பட்டாய்!என் கோர முகம்கோணாதிருக்கஇயல்பு மாற்றிசுயம் தொலைத்தாய்!உன் உலகையோஎன்னை சுற்றிஅமைத்துக் கொண்டாய்!வறுமையிலும்ஈர விறகோடு விறகாய்பொசுங்கிஎன் வயிற்றுப்பசி தீர்க்கஉன்வயிற்றளவை குறுக்கினாய்!நான் மிடுக்காய்உடை உடுத்தி பள்ளி செல்ல...நீயோஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய்!கருவறையில்மட்டுமல்லநான் வளரும் போதேஉன் ரத்தம் குடித்து தான்வளர்ந்தேன்!மனிதனாய் என்னைவெளியுலகிற்கு அடையாளம்காட்டியவளே...இன்றுஇரக்கமற்ற முதுமைஉன் உடலைசெல்லாய் அரித்துசெல்லாக்காசாய்படுக்கையில்குழந்தையைப் போல்கிடத்தியுள்ளது!எனக்காகசுயம் மறந்துதொலைந்து, கரைந்துபோனவளே...எனக்கு நீகுழந்தையாய்ஆகும் பாக்கியத்தை தவிரவேறு என்ன பிராயசித்தம்உனக்கு நான்செய்து விட முடியும்!— எஸ்.ஏ.சரவணக்குமார், திருநின்றவூர்.