உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

விடியும் வரை காத்திருக்காதே!விடிவதற்குள் வேலையைஆரம்பித்து விடுவேலை இல்லை எனதுாங்கி சுகம் காணாதே!ஓடும் மனிதர்களோடுநீயும் சேர்ந்து கொள்எந்த வேலையும் இழிவல்லகுப்பையை சுமந்தாலும்கூலி கிடைக்கும்!பட்டதாரி என்பதை மறபலதரப்பட்ட வேலைகள்உன் முன்கொட்டிக் கிடக்கின்றன!சிறகடித்து பறந்துதிரிந்தால் தான்பறவைக்கும் உணவு கிடைக்கும்பதுங்கி, பாய்ந்து, ஓடிஉருண்டால் தான்புலிக்கும் இரை கிடைக்கும்!அழுதால் தான் பால் கிடைக்கும்குழந்தைக்கும் தெரிகிறதுபடிப்பிற்கு ஏற்ற வேலைஉழைப்பிற்கேற்ற ஊதியம்யாரும் தருவதில்லை!உழைப்பை முழுவதும்ஊதியமாக்க கற்றுக்கொள்உனக்கும் விடியும்ஒருநாள் இனிதாக!—பாரதி சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !