உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காலன் வரக் காத்திருக்கிறேன்!தாலாட்டு பாடிஉன்னை துாங்க வைத்த வாய் இன்றுதானாய் புலம்புகிறது!சொன்ன கதையையேதினமும் சொல்லச் சொல்லிகேட்ட உனக்குசொன்னதையே திரும்ப ஒரு முறைசொல்லும் என் பேச்சுஎரிச்சலுாட்டுகிறது!ஒரு வேளை உணவுண்ணபல மணி நேரம் உணவூட்டிய நான்ஒரு கவளம் உணவை வாயருகேகொண்டு செல்லகை நடுங்கி சிதறுகிறேன்...காணும் நீ அருவருக்கிறாய்!நோயுற்ற போது, உன்னைதோளிலும், மார்பிலும் கிடத்திதுாங்காமல் கழிந்தன இரவுகள்...இன்றோ, நோயுற்ற நிலையில்இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்துணையற்ற நிலையில்!அருகில் நீ வந்துஅன்புடன் பேச ஏங்குகிறேன்...ஆனால்அவசரமான உன் உலகிலேஅது அரிதாகி போனது!கட்டிலோடு கட்டிலாய்கனவுகளிலேஉன்னைகுழந்தையாய் தாலாட்டிவளர்க்கிறேன் கண்ணே!வேலை சுமையாய் அழுந்தஅன்றாட வாழ்க்கையேஅல்லாடும் வாழ்க்கையாய்அவதியில் நீ வாழ்கிறாய்...அதில் நானும்ஒரு சுமையாய் உனக்கு!காலன் வந்து அழைக்கும்போதுகடமைகள் அனைத்தையும் புறந்தள்ளிகண்ணே...நீ கருமம் செய்யவருவாய் எனகாத்திருக்கிறேன் மகனே!- தி.வள்ளி, திருநெல்வேலி.ஒரு தாயின் புலம்பல்!அன்பு மகனே...தாய்மைப் பேற்றுக்காகநான் தவமிருந்ததருணங்களைஎண்ணிப் பார்க்கிறேன்!நீகருவில் வளர்ந்த காலத்தில்கண்டதை உண்ணாமல்கண்டதை காணாமல்உணவுப் பத்தியத்தோடுஉணர்வு பத்தியமும் இருந்தேன்!உன்னை குழந்தையாகபிரசவித்தபோதுஎன்னை தாயாகபிரசவித்துக் கொண்டேன்!உனக்கு அமுதுாட்டும்அந்த தருணங்களில்எனக்குள் அபிஷேகம் நடந்தஅதிசயம் கண்டேன்!நீ உதிர்த்த மழலை மொழிக்குபுது அகராதி தயாரித்தேன்நீ உதிர்த்த உணவில்புதிய ருசி கண்டேன்!ஆனால், மகனே...கோவிலுக்கு போகத்தானேகூட்டிக் கொண்டு போனாய்கூட்டத்தின் நெரிசலில் ஏன் என்னைதொலைத்து விட்டுப் போனாய்?கர்ப்ப கிரகத்தில் நின்றுகடவுளை கும்பிட்ட நீகர்ப்பத்தில் உன்னை சுமந்தஎன்னை எப்படி மறந்தாய்?அனாதை இல்லத்தில் இங்குஅத்தனையும் கிடைக்கிறதுஆனாலும், உன்னை பார்க்கும்ஆவல் மட்டும் தகிக்கிறது...என்றாவது ஒருநாள்என்னை பார்க்கவருவாயா?- இளசை சுந்தரம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !