கவிதைச்சோலை
புன்னகையாய நமக...குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...குறைகள் நம் குற்றங்களல்லநிறைகளாய் மாற்ற நித்தியமுயற்சி ஒன்று போதும்!இந்த வாழ்வையும், தாழ்வையும்விரலசைவில் மாற்றி விடலாம்விழிப்புடன்மனமசைத்தால் போதும்!காலம் நம்மை வதைத்தாலும்காலனையும் நம்காலால் எட்டி உதைக்கலாம்திறமையை தினம்திரட்டி வைத்தால் போதும்!குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...நம்மை எதுவும், எது செய்தாலும்துளியும் துவளாமல் சிரிக்கலாம்துணிவைப் பதியனிட்டால் போதும்!துன்பமே நம்மைத் துவட்டினாலும்துடைத்து விட்டு சிரிக்கலாம்நம்பிக்கையுடன்உழைப்பிருந்தால் போதும்!இந்த வாழ்வைஇனிமையாக்கும் மந்திரம்ஒன்று சொல்கிறேன்...பெரிதாக ஒன்றுமில்லை...'புன்னகையாய நமக' போதும்!குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...குணம் கொல்லும் கோபத்திலும்நம்மை வாட்டும் துரோகத்திலும்மனம் விட்டுச் சிரிக்கலாம்அன்புப்பயிர் வளர்த்தால் போதும்...சந்தோஷ சாம்ராஜ்யம்நம் கையில்!- செல்லம் ரகு, திருப்பூர்.