கவிதைச்சோலை!
அப்போதுதான்...அன்பு காட்டி என்னைதுன்பத்தில் தள்ளுங்கள்...அப்போது தான்இன்பத்திற்கான வழியைஇதயம் சிந்திக்க துவங்கும்!ஆசை காட்டி என்னைமோசம் செய்யுங்கள்...அப்போது தான்அமிர்தமும் நஞ்சு என்றுஅறிந்துகொள்ள முடியும்!வார்த்தைகளால் என்னைவசை பாடுங்கள்...அப்போது தான்வருத்தத்தில் திருத்திக் கொள்ள முடியும்!அலட்சியத்தால் என்னைஅவமானப்படுத்துங்கள்...அப்போது தான்லட்சியத்தை அடையலட்சணம் பிறக்கும்!சோதனையில் என்னைவேதனைப்படுத்துங்கள்...அப்போது தான்சாதனை படைக்கசக்தி பிறக்கும்!தொல்லை கொடுத்த என்னைதுரத்தி அடியுங்கள்...அப்போது தான்துக்கத்தை தொலைக்கதுணிவு பிறக்கும்!கால் இடறி என்னைகவிழ்த்துப் போடுங்கள்...அப்போது தான்ஆகாயத்தை தொடஆவேசம் பிறக்கும்!தோல்வியில் என்னைதுாக்கிப் போடுங்கள்...அப்போது தான்தொலைத்த வெற்றியைதேட முடியும்!துயரங்களிலேயே என்னைதொடர்ந்து தள்ளுங்கள்...அப்போது தான்உயரத்தை அடையஉந்து சக்தி பிறக்கும்!- க.அழகர்சாமி, கொச்சி.