கவிதைச்சோலை!
வாழ்வு மலரும்! உதிக்கும் கதிரவன் அழகையும்மறையும் சூரியன் எழிலையும்ரசித்துப் பழகணும்!பெய்யும் மழையையும்சன்ன இழையாய் விழும்மழை நீரையும்கண்டு களிக்கணும்!மலர்களின் நறுமணத்தைநுகர்ந்து மகிழணும்கனிகளின் சுவையைசுவைத்து நெகிழணும்!வண்ணப் பூச்சிகளின்வசீகர நிறங்களைசிலாகித்து சொல்லணும்!குளிர்ந்த தென்றலையும்மார்கழி பனி காற்றையும்இதமாய் அனுபவிக்கணும்!இயற்கை சூழலைஇன்பமாய் ஆனந்திக்கணும்பறவைகளின் குரலைசெவிமடுத்து மகிழணும்!மின்னும் தாரகைகளையும்விண்ணில் தவழும் நிலவையும்திரண்டு ஓடும் மேகங்களையும்பார்த்து ரசிக்கணும்!ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும்பொங்கும் ஆற்று நீரையும்கொட்டும் அருவிகளையும்நின்று கவனிக்கணும்!இயற்கை நமக்காககொடையாய் அளிக்கும்ஆனந்த உன்னதங்களையும்சுவீகரித்து பழகணும்!அதனால், நம்முள்ளேஅமைதி கிடைக்கும்உள்ளம் தெளிவுறும்சந்தோஷம் பொங்கும்வாழ்வு மலரும்!— சாய், மதுரை.