கவிதைச்சோலை!
மனம் எனும் கோவில்!மகிழ்ச்சி வார்த்தைகளைபகிர்ந்து பாருங்கள்மனக் கசப்புகளுக்குமருந்தாவீர்!மன்னிக்கும் மனங்களைவளர்த்துப் பாருங்கள்மனிதாபிமானத்தின்மகத்துவம் அறிவீர்!தலைவணங்கும் கலைகளைகற்றுப் பாருங்கள்தலைவனாகும் தகுதிபெறுவீர்!தட்டிக் கொடுக்கும் ஊக்கங்களைஊட்டிப் பாருங்கள்தடைக் கற்கள் உடைவதைகாண்பீர்!நன்றி சொல்லும் உள்ளங்களைஉருவாக்கிப் பாருங்கள்நாளைய தலைமுறையின்நம்பிக்கை நட்சத்திரமாவீர்!அள்ளிக் கொடுக்கும் வள்ளலாய்வாழ்ந்து பாருங்கள்அங்க தேசத்து அரசனாகஅங்கீகரிக்கப்படுவீர்!மற்றவர் வாழ வாழ்த்துக்கள்வழங்கிப் பாருங்கள்வளர்ச்சியின் உச்சம்தொடுவீர்!பொன்னாய் மின்னும்புன்னகைப் பூக்களைவீசிப் பாருங்கள்பூலோகம் உங்கள்பின்னால் வரும்!மனமென்னும் கோவிலில்குடியிருக்கும் இந்தகுணங்களை கொஞ்சம்கொடுத்துப் பாருங்கள்இதயங்கள் ஒவ்வொன்றும்இனிதே வரவேற்கும் சிவப்புக் கம்பளம் விரித்துஉங்களை!- க.சாமி, கேரளா.