கவிதைச்சோலை!
முதுமை உனக்கு முடிவுரையை எழுதுவதற்குள்...எழுந்து வா இளைஞனேநான் உனக்கு வழி காட்டுகிறேன்...உன்னால் எழ முடியவில்லையா, இருஉன்னை என் தோளில் சுமக்கிறேன்!கீதையை சொல்வதால் யாரும் கண்ணனாக முடியாது!சிலுவையை சுமப்பதால் யாரும்இயேசுவாக முடியாது!உன்னை நான் சுமப்பதால் - ஒருபெண்ணின் மாங்கல்யம் நிலைக்கட்டும்!நீ மட்டும் முடிவெடு,'இனி குடிக்க மாட்டேன்' என்றுஉன் மீது விழும் எச்சங்கள் - நாளைநீ தொடப் போகும் உச்சங்கள்!வேலை இல்லை எனும்கோஷங்கள் அரசியல்வாதிகளின் காதில்தங்களை துதிக்கும்வேதமாக ஒலிக்கிறது!எழுதப் பழகு, கவிதைகள் தவழும்பேசிப் பார், மேடைகள் வரவேற்கும்நடித்துப் பார், நவரசங்கள் ததும்பும்உழைத்துப் பார், வேர்வை சுகமாகும்!வரைந்து பார், ஓவியங்கள் உயிர் பெறும்செதுக்கிப் பார், சிலைகள் நடனமிடும்சிந்தித்துப் பார், வானம் வசப்படும்கொடுத்துப் பார், நெஞ்சம் நிறையும்!கசப்பையே தினமும் மென்றால், இனிப்பாகும்வேதனைகளை தாங்கினால், வெற்றி நிச்சயம்!வெயிலில் கைவீசி, வீதியில் நடந்து பார்சர்க்கரை நோயும் தலைதெறிக்க ஓடும்!இளைஞனே... முதுமை உனக்குமுடிவுரை எழுதுவதற்குள்தன்னம்பிக்கையுடன் எழுந்து நடதமிழகமே தலை நிமிரும்!- பாரதி சேகர், சென்னை.