கவிதைச்சோலை!
வாசலில் காத்திருக்கும் வசந்தம்! அகல் விளக்கை ஏற்றி வைஅறையின் இருள் விலகட்டும்மனக்கதவை திறந்து வைவசந்தம் வந்து வாழ்த்தட்டும்!பதினெட்டு புராணங்களைபலமுறை படிபுரியாத புதிருக்குவிடை கிடைக்கும்!மெய்யா... பொய்யா...சிந்தனையை துாண்டி விடுதியானத்தின் வாசலுக்குவழி காட்டும்!இலக்கு எதுமுடிவெடுநின்றாலும், நடந்தாலும்உணர்விலும், உறக்கத்திலும்இலக்கையே சிந்தித்திருகனவு நனவாகும்இலக்கு எளிதாகும்!உள்ளிருக்கும் ஆன்மாவைதட்டி எழுப்பும்சூட்சுமம் தெரிந்தால்முக்காலத்தையும் உணரும்ஞானியாகலாம்!எத்தனை ஆண்டுகள்வாழ்ந்து என்ன பயன்இனியாவது விழித்துக்கொள்ஆசை, பொறாமை, கோபம்மூன்றையும் மறந்து விடு!மணி, மந்திரம், மூலிகைமூன்றையும் வைத்துஅண்டத்தையும்பிண்டத்தையும்இணைக்கும் வித்தையைசெய்தவர்கள் சித்தர்கள்!உடல், உயிர், மனம், ஆன்மாஒன்றுக்குள் ஒன்று என்றாலும்ஒன்றிலிருந்து ஒன்றைபிரிக்கும் ஆற்றல்எப்படி வந்தது அவர்களுக்கு!மனம் செய்யும் மாயம்எதை விரும்புகிறாயோநினைத்துக் கொண்டே இருநினைத்த பொருள்கையில் வரும் வரை!அலை கடலில்எங்கோ வரும் கப்பல்கண்ணுக்கு தெரிவது போல்அலைபாயும் எண்ணங்களில்நினைவலைகளை கூர்மையாக்கிஒரு புள்ளியில் நிறுத்து!உன்னை சுற்றி வீசும்வசந்தத்தை மறந்துஇனம் புரியாஇன்ப கடலில் நீமிதப்பாய்...மனதை வசப்படுத்துவாழ்வின் சிக்கல்களுக்குவழி கிடைக்கும்!பாரதி சேகர், சென்னை.