உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எங்களாலும் முடியும்!

நாங்கள் சாதாரணபெண்கள் இல்லைஎங்கள் வம்சம்இதிகாச நாயகிகளைக் கொண்டது!அதிலொருத்திசூரியனைஉதிக்க விடாமல்தடுத்தாள்!இன்னொருத்தியோகணவனைஎமனிடமிருந்துமீட்டு வந்தாள்!கணவனின் தேருக்குகட்டை விரலையேகடையாணியாக்கினாள்ஒருத்தி!மூன்று தேவர்களையும்குழந்தையாக்கிபாலுாட்டியவளும்எங்கள் வம்சம் தான்!கேட்பதற்கேபெருமையாகஇருக்கிறதல்லவா...எங்களாலும்இந்த வித்தையெல்லாம்செய்ய முடியும்!ஆனால் -நேரம் தான் இல்லை...குடம் குடமாய்தண்ணீர் பிடிப்பதிலும்ரேஷனுக்கு'க்யூ'வில் நிற்பதிலும்மிச்ச நேரத்துக்குஆபீஸ் போகபஸ்சுக்கு நிற்பதிலுமேஎங்கள் பொழுதுபோய் விடுகிறது!இல்லாவிட்டால்எங்களாலும்இதையெல்லாம்செய்ய முடியும்!ர. ஐவண்ணம், திருவண்ணாமலை.

பிரமித்து போகட்டும்!

அவர்கள் பிரமித்து போகட்டும்உன் அழகைப் பார்த்தல்ல...உன் அறிவைப் பார்த்து!அவர்கள் திணறிப் போகட்டும்உன் தேகத்தைப் பார்த்தல்ல...உன் திறமையை பார்த்து!அவர்கள் வாயை பிளந்து நிற்கட்டும்உன் வளைவுகளைப் பார்த்தல்ல...உன் வாழ்க்கையை பார்த்து!அவர்கள் அசந்து போகட்டும்உன் மெல்லிடையை கண்டல்ல...உன் மேலாண்மையை கண்டு!அவர்கள் சிலையாய் நிற்கட்டும்உன் வெட்கப் புன்னகை பார்த்தல்ல...உன் வீர புன்னகை பார்த்து!அவர்கள் பித்தம் கொள்ளட்டும்உன் நெற்றி வனப்பை கண்டல்ல...உன் வெற்றி அடுக்கை கண்டு!அவர்கள் சங்கடம் கொள்ளட்டும்சமைந்த உன் பெண்மையை கண்டல்ல...சமயோசிதமாய் முடிவெடுக்கும்உன் திண்மையை கண்டு!அவர்கள் ஒடுங்கி போகட்டும்உன் ஓரப் பார்வை கண்டல்ல...உன் ஒழுக்கப் பார்வை கண்டு!போக பொருளாய் பார்த்த கண்ணைஏகலைவியாய் பார்க்க வைக்கும் திறமைஉன்னிடம் தான் உள்ளது பெண்ணே...அழகால் உன்னை அடையாளப்படுத்தாமல்அறிவால் உன்னை அடையாளப்படுத்து!உன்னுள் கட்டி வைத்திருக்கும்சக்தியை வெளியே இழுத்து வா...உன்னை தொட்டு பார்க்க நினைத்தவர்எட்டி நின்று வணங்கட்டும்...தெய்வத்தை கண்டது போல்!கா. பவித்ரா, திண்டுக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !