உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உன்னை பார்க்கும் மழை!சடசடவென்று முற்றத்தில்வந்து விளையாடும் மழைமுதலில் உன்னைத்தான் பார்க்கிறது!காற்றின் கரம் பிடித்துஜன்னல் அருகே வந்தமரும்மரமல்லியின் கண்கள்தேடுவது உன்னைத்தான்!குளிர் மழையில் குணுகுணுக்கும்புறாக்களின் கதையிலும்நீதான் மையப் புள்ளி!விலாசம் தொலைத்துவீட்டிற்குள் நுழைந்தவண்ணத்துப் பூச்சியும்தேன் சொட்டலாய் பார்க்கிறதுஉன்னையே மரபு மீறி!கிணற்றடியில் கீச்சிடும் அணில்களும்தங்கள் மொழியில்உன்னைப் பற்றியே பேசிஆவலை தீர்த்துக் கொள்கின்றன!நான் என்ன செய்வது...உனக்கு சுற்றி போடவாஅன்றி உன்னைச் சுற்றும்எல்லாவற்றுக்கும்ஒரு சூட்டுக்கோல் வைக்கவா!இ.எஸ்.லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !