உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நினைத்தபடி வந்தாய்...* எனக்கானமன்னவனாக...புண்ணாக்கும்மணவாளனாக...* காதலானதில்கொடுத்துவைத்திருந்தேன்...கல்யாணமானதில்வெறுத்து...* காதலனாய்நீயோர்நயாகரா...கணவனாய்சஹாரா!* கொஞ்சக்கெஞ்சவில்லை...அஞ்சசெய்யாமல்இருக்கலாமே!* எப்போதுவருவாயெனஅப்போதிருப்பேன்...ஏன் வருகிறாயெனஇப்போது!* காதற் கற்கண்டுதிகட்டலாம்...காலங்களானதும்அகங்காரமானதேன்!* ஊடல்கள்,காதலை வளர்க்கும்;கல்யாணத்தைஉடைக்கும்...* இப்போதும்,நானுனைவெறுக்கவில்லை...பொறுக்கிறேன்!* உருவாக்குவதைவிட,உடைப்பதுசுலபமென்றறிந்ததால்...உன்மேலானகாதலின்னும்மீதமிருப்பதால்...— ச.பிரசன்னா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !