உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

விழித்தெழு இளைஞனே!விழித்தெழு இளைஞனேவாழ்க்கையின் உனக்கான பந்தயம்துவங்கப்பட இருக்கிறது!விழுந்து, எழுந்து, விளையாடிபருவத்தில் காதல் வயப்பட்டு,கல்யாணம், குழந்தை என்றுஅன்றாட வாழ்க்கையில் உழன்றுமூப்பெய்தி மரித்துப்போக மட்டுமா நீ?இன்பத்தில் மகிழ்ந்துதுன்பத்தில் தொழும்மூடப் பழக்கத்தை மூட்டை கட்டி வை!நீ விழித்துப் பார்க்கையில்உன் கண்ணுக்கெட்டிய துாரத்தைஉன் விழித்திரை செல்லும்கண்ணுக்கெட்டாத துாரத்தையும்உன் அறிவுத்திறன் சொல்லும்!பொறியியல் படித்திராத பறவைகள்தனக்கென கூடு கட்டின மாதிரி...மருத்துவம் படித்திராத நச்சுப் பாம்பும்தானே மருந்தாயும்ஆகிப்போகிற மாதிரி...முடிசூடா சிங்கங்கள் காட்டிற்குள்தனக்கென அரசாங்கம்நடத்துகிற மாதிரி...உன் பிறப்பின் அர்த்தத்தை தேடுஇந்த உலகத்தின் பாடத்தைநீயே கற்றுக்கொள்!உன் தாயின் கர்ப்பம்பொதியினை அல்ல...பொன்னை தரித்ததாய் இருக்கட்டும்!ஒரு தந்தையிடமிருந்துகணையாய் புறப்பட்டவன் தான்...ஒரு விந்தை மனிதனை பெற்றதாய் இருக்கட்டும்!உன்னிடத்தில் தான் அப்துல்கலாம்எதிர்காலத்தையே தேடிக் கொண்டிருந்தார்குறிக்கோள் இல்லாத அம்பாய்குறை பிரசவம் ஆகிவிடாதே!உன்னால் உலகம் செழித்த கதையைஊரார் சொல்ல வேண்டும்இவ்வுலகம் வெல்ல வேண்டும்!நாளைய உலகம் என்றில்லைவிடிந்த இன்றைய பொழுதும்உனக்கானதாய் இருக்கட்டும்!மண்ணிற்கு நீ உரமாகும் முன்நெருப்பிற்கு நீ விருந்தாகும் முன்முயற்சி என்னும் மூலதனத்தால்முகவுரை எழுது!நுாறு இளைஞர்களை கேட்டவிவேகானந்தராய்வாழ்க்கையின் உனக்கான பந்தயம்துவங்கப்பட்டு விட்டதுவிழித்தெழு இளைஞனே!செ. தெய்வமணி, அருப்புக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !