கவிதைச்சோலை!
கால விரையம்!கணப்புச் சட்டிகளைதயார் செய்வதிலேயேகாலம் கழிந்தால்குளிர் காய்வது எப்போது?வீணை நரம்புகளைசுதி சேர்ப்பதிலேயேகாலம் கழிந்தால்கானம் இசைப்பது எப்போது?வண்ணக் கலவைகளைவகைப்படுத்துவதிலேயேகாலம் கழித்தால்ஓவியம் தீட்டுவது எப்போது?கற்களைத் தேர்ந்தெடுப்பதில் காலம் கடத்தினால்சிற்பம் செதுக்குவது எப்போது?துடுப்பைச் செதுக்குவதிலேயேகாலம் கழித்தால்படகைச் செலுத்துவது எப்போது?பரிட்சை பற்றியேபதைத்துக் கொண்டிருந்தால்படிக்க துவங்குவது எப்போது?கால விரயத்திலேயேகரைந்து போய் விட்டால்காணும் வெற்றிகள் எப்போது?இளசை சுந்தரம், மதுரை.