உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்விற்கென ஓர் நெறி...உனக்கென ஓரிடத்தைஉருவாக்கும் வித்தையைநீயே கற்றுக்கொண்டு விட்டால்நிகரற்ற வாழ்வை நீ வாழலாம்!ஓராயிரம் உபதேசங்கள்உனை சுற்றியபோதும்மனம் சொல்லும் மார்க்கமேற்றால்தினம் தினம் வெற்றிப் படியேறலாம்!உண்மை பேசும் உபாயமிருக்கபொய் பேசும் அபாயம் எதற்கு?நன்மை நல்கும் நற்செயல்களிருக்கபுன்மை நெறி நமக்கெதற்கு?நேர்மை தரும் பெருமை இங்கிருக்கசீர்மை தரா சிற்செயல்கள் சிறப்போ!கூர்மை தரும் ஆக்க அறிவிருக்ககூறுகெட்ட ஆகா செயலெதற்கு?உழைப்பின் உன்னதம் உணர்ந்த பின்பிழைப்பின் மீது பயமெதற்கு?களைப்பு கண்ட பின்னும்கள் நெஞ்சம் தேட வேண்டாமே!உன் மீது கொண்ட நம்பிக்கைஉனக்கு நீயே கொடுக்கும் காணிக்கை...வேட்கை நேரத்திலெதற்கு வேடிக்கைவேகமும், விவேகமும் தானே வாடிக்கை!கண்கள் மூடி துாங்கும்போதும்கனவுகளை மூடி விடாதே!மண் நம்மை மூடும் முன்மாற்றங்களை விதைத்து விடு!மனித வடிவம், இயற்கை செய்த விந்தைமானுடம் காப்பதே தேவையான சிந்தை...உலகம் சிறக்க வாழ்ந்திடுவோம்உள்ள பிறவியில் மகிழ்ந்திடுவோம்!பா. சக்திவேல், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !