கவிதைச்சோலை!
நவீன அரசியல்!தொண்டர்களை கொண்டுதொண்டாக நடந்த அரசியலேகுண்டர்களைக் கொண்டுநடக்கும் தொழிலாகிப் போனது!வாக்குத் தவறாமல் தலைவர்கள்நடந்தது அந்தக் காலம்...நாக்கு தவறுகிறது இந்தக் காலம்...ஓட்டின் வலிமையைக் காட்டிலும்அரசியல்வாதிகளின்நாக்கின் வலிமை அதிகம்!தேர்தலுக்கு முன் அரசியல்வாதிகள்கும்பிடு போடுவதும்தேர்தலுக்கு பின் வாக்காளர்கள்கூப்பாடு போடுவதும் வாடிக்கையாயிற்றுதேர்தலுக்கு முன் மதிப்பதும்முடிந்த பின் மிதிப்பதும் சகஜமாயிற்று!கல்விக் கூடங்களை அமைத்துபடிக்கச் சொன்னது அப்போகுடிக்கச் சொல்வது இப்போ...அரசு பணிக்குத் தேவைகல்வித் தகுதியும், சிபாரிசும்தகுதியே தேவையில்லைஎங்கள் அரசியல்வாதிகளுக்கு!குணம் பார்த்து, செயல் பார்த்துஓட்டளித்தது ஒரு காலம்கொடுக்கும் ஆயிரத்துக்கேற்பஓட்டளிப்பது இந்தக் காலம்...தேர்தல் வயலில் பணத்தை விதைத்துஓட்டுப் பயிர் ஈட்டிடும்அரசியல் விவசாயிகள்!இலவச வலை விரித்துபணத் துாண்டிலிட்டுஓட்டுகளை வேட்டையாடிவாகை சூடிடும் வேடதாரிகள் கூட்டம்...ஓட்டின் மதிப்பறியாமல்ஒருநாள் மகிழ்ச்சிக்காகஓட்டளித்து விட்டுஐந்தாண்டுகள் அழுது புலம்பும்அப்பாவி மக்கள் கூட்டம்!மக்களுக்கான சேவைவியாபாரம் ஆகிப்போனதுதொண்டாய் நடந்த அரசியல்பெரும் தொழிலாகிப் போனது!போனது போகட்டும்மாறுதல் காணும் நேரமிது...மனது வைப்போம்மாற்றத்தைக் கொண்டு வருவோம்!சோம.சிவ.சங்கர், திருப்பரங்குன்றம்