உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வீழ்வேனென்று நினைத்தாயோ!தாய் மொழியும், தமிழ் மொழியும் உணர்வில் கலந்திடமுதுகெலும்பான விவசாயம் சுவாசம் தரதாய் பாசமும், தாய் மண்ணும் உரம் கொடுக்கவீரமும், விவேகமும் பக்கபலமாய் நிலைத்திட...போராடும் குணமும், மனிதநேயமும் மலர்ந்திடஉழைப்பின் வேகம் மூலதனமாய் முன்செல்லஆக்கப் பாதையே எதிர்கால தேடலாய்வீழ்வேனென்று நினைத்தாயோ; துளியும் இல்லை!காதலும், கனிவும் மனதில் வெளிப்படசரித்திரமும், சாதனையும் வழி காட்டிடஎண்ணத்தில் என்றும் துாய்மை நிலவிடபஞ்ச பூதங்கள் நிலைத்து பாதுகாக்க...வேற்றுமை ஆயினும் ஒற்றுமை துளிர்த்திடசமத்துவம் கண்டு சமாதானம் உலா வரஅறிவியலும், விஞ்ஞானமும் கையில் தவழவீழ்வேனென்று நினைத்தாயோ அற்ப அந்நியரிடம்!பழமைக்கும், புதுமைக்கும் பாலமாய் நின்றிடஇலக்கணமும், காவியமும் கண்ணில் தோன்றிடவீறிட்டெழும் விதை எதிர்கால விருட்சமாய்எதிர்நீச்சல் போட்டு விழித்தெழ நாளும்...கடமையும், கண்ணியமும் முதல் படியாய்தனி மனித ஒழுக்கமே ஊன்றுகோலாய்தொடரும் பயணம் வீழ்வேனென்று நினைத்தாயோவெல்வேன், வளர்வேன், வாழ்வேன் தலை நிமிர்ந்து!ஆர். சீதாராமன், சீர்காழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !