கவிதைச்சோலை!
மே 9, அன்னையர் தினம்! - மறக்கவில்லை அம்மா!ஆராரோ... ஆரிரரோ - எனதாலாட்டு பாடும்போதேவாழ்வின் சூட்சுமத்தைக்கற்றுக் கொடுத்தவள் நீ!கூழ் குடித்துறங்கினாலும்கூடி வாழ்தலையும்மனிதர்களை நேசிக்கும் பண்பையும்ஊட்டி வளர்த்தவள் நீ!கணக்கு பார்த்து கடமை ஆற்றாமல்வேளை பொழுதில்லாமல்வேலை செய்வதற்குஉரமிட்டவள் நீ!அதிகாரம் என்ற பெயரில்அநியாயம் செய்வதற்கும்துதிப்பாடி சுகித்திருக்கவும்கற்றுத் தரவில்லை நீ!வாது வழக்கோவம்பு தும்பு செய்யவோயாரையும் நிந்திக்கவோவழி காட்டவில்லை நீ!தேடிய பொருளைமறைத்து வைக்காமல்பசித்து வந்தவரின் பசியாற்றபாங்காய் எடுத்துரைத்தவள் நீ!சக மனிதர் கண்ணீர்மண்ணில் வீழ்வதற்குள்மடியில் ஏந்தசொன்னவள் நீ!ஜீவன் இருக்குமட்டும்கள்ளப் பிழைப்பு செய்யாமல்பழி பாவங்களுக்கு அஞ்சிநீதி நெறி தவறாமல்வாழ்வாங்கு வாழ சொன்னவள் நீ!வாழ்க்கைக் கோட்டையின்பூட்டைத் திறக்கசாவி கொடுக்க வந்தசரித்திர புருஷர்கள் பலருண்டு...ஆனாலும், நீ கொடுத்தஅன்பு சாவி மட்டுமேநிலை தடுமாறாமல்உலகில் உழல வைக்கிறது!மானுக்குள் மறைந்திருக்கும்கஸ்துாரி போல்பாசப் பூக்களை மனதிற்குள்குடியிருக்க செய்தவள் நீ!தொட்டிலில் கற்றுக் கொண்டதுஇறுதி வரை என்ற மரபைமறக்கவில்லை அம்மா...நீ விதைத்த விதைவீரியத்துடன் முளைத்தெழுந்துவிருட்சமாகி வளர்ந்துள்ளது!நீ சொல்லிக் கொடுத்தவழியில் செல்வதைத் தவிர - உனக்குவேறென்ன பிரதியுபகாரம்செய்துவிட முடியும் அம்மா!செல்வி நடேசன், சென்னை.