உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நவீன தீபாவளி!தீபாவளி என்பது விடுமுறையோ தொலைக்காட்சி ஆக்கிரமிப்போ அல்ல!கோபம், துரோகங்களை தலை முழுகிஇன - மன மாசுகளை கொளுத்திஅக்கிரமங்களுக்கு எதிராககொண்டாடும் ஒளி திருநாள்!நண்பர்களுக்கு புன்னகையும்எதிரிகளுக்கு பூக்களையும்பரிசளிக்கும் இனிய நாள்!வீடுதோறும் பலகாரம் செய்துஇல்லாதவரோடு பகிர்ந்துண்ணும்ஒளி திருவிழா!அன்றுஒரு நரகாசுரன் தான்...இன்றோநாற்காலி ஆசையில்சகுனியானவன்கல்வியை சந்தையாக்குபவன்வட்டி என்ற பெயரால்ஏழையின் வயிற்றை சுரண்டுபவன்ஜாதி - மத பேத தீக்குபெட்ரோல் ஊற்றுபவன்உழைப்பாளரின் ரத்தத்தைஉறிஞ்சுபவன்...இத்தனை அசுரன்களை அழிக்கசபதம் எடுக்கும்மகா தீபாவளி!தீபாவளி இனிப்பாகஇணையட்டும் இதயங்கள்...சரவெடியாய் பொசுங்கட்டும்பிரிவினைகள்!மத்தாப்பாய் மலரட்டும்அன்பெனும் மலர்...பூசல்கள்புஸ்வானமாகட்டும்!கலவர மனதைகட்டுக்குள் வைக்கசாட்டை ஏற்றுவோம்!சிறுமைகள் தீர்ந்துமனையெங்கும் மங்களம் தழைக்கட்டும்!இனி, தீபாவளி திருநாள்மக்கள் மாண்பு பெறதேவர்கள் போற்றகர்வத்தோடு கொண்டாடும்ஒளித் திருநாளாகட்டும்!- செல்வி நடேசன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !