கவிதைச்சோலை!
காலம் போகும் பாதை!அம்மாவின் கருவறை எனினும்அனுமதிக்கப்பட்ட நாள் வரை தான்அங்கே உறங்குவதும்-அவள் வாயிலாய் நாம் உண்பதும்!அப்பாவின் கரங்கள் எனினும்குறிப்பிட்ட காலம் வரை தான்அங்கே தவழ்வதும்-தோளில் ஊஞ்சலாடி மகிழ்வதும்!கல்லுாரி- படிப்பு, -வேலை என்றுவாழ்க்கையை ஒரு கோடு போட்டுஇழுத்துச் செல்கிறது காலம்!காதல்- திருமணம்-, குழந்தைஅதுவும் காலம் நிர்ணயித்தகணக்குகளுக்குள்முடித்தாக வேண்டியகட்டாய வாழ்க்கை நமக்கு!கடமைகள் முடிக்கவும்முடிக்காத கடமைகளுக்காக வருந்தவும்அதற்கும் மூலையில்துளிக் காலம்நமக்காகவே முடங்கிக் கிடக்கும்!போகிறேன் என்றாலோபோக மாட்டேன் என்றாலோகாலம் எந்தக் கருணையும் காட்டுவதில்லைஅது--தான் நினைத்தபடிதான்நடக்கிறது, நகர்கிறது அனைத்தையும் நடத்துகிறதுகாலம் அழைத்துப்போகும் பாதையில்நாம் போய்க் கொண்டிருக்கிறோம்!இ.எஸ்.லலிதாமதி, சென்னை.