கவிதைச்சோலை!
வாழ்வு மகத்தானது...அரசாங்க வேலை தேடிஆலாய் பறப்பதை விடஅன்றாட வேலைகள் செய்துஆனந்தமாய் வாழ்வது சிறந்தது!அலங்கார கடைகள் அமைத்துஅதிக விலை பெறுவதை விடநடைபாதை கடைகள் அமைத்துநல்லுறவு வளர்ப்பது நலமானது!முட்டி, மோதி, முறைத்துமுகஞ்சுழித்து செல்வதை விடசங்கடங்கள் தீர்த்துசந்தோஷமாய் வாழ்வது சரியானது!பிரித்து, திரித்து பேசிபெருமையில் மிதப்பதை விடநிதானத்தில் நிலைநிறுத்திநிம்மதியாய் வாழ்வது நிரந்தரமானது!தம்பட்டம் அடித்துதலைக்கனத்தில் நடப்பதை விடஅமைதியில் அரவணைத்துஅன்பாய் வாழ்வது அழகானது!வெறுப்புகளை விதைத்துஉறவுகளை ஒதுக்கி வாழ்வதை விடவேண்டியவைகளை விட்டுக்கொடுத்துவிருப்பத்தோடு வாழ்வது விவேகமானது!கட்டளை போட்டுகடமைகள் செய்வதை விடஇன்பத்தை இரவல் கொடுத்துஇனிமையாய் வாழ்வது இதமானது!மகுடம் சூட்டிமன்னனாய் வாழ்வதை விடமனம் விட்டு பேசிமக்களோடு மக்களாய் வாழ்வது மகத்தானது!க. அழகர்சாமி, கொச்சி