கவிதைச்சோலை!
மவுனம் நல்லதுதான்!* பார்வையால்சிரிக்கிறாய்...மவுனத்தால்முறைக்கிறாய்!* நீ என்னைவிரும்புகிறாயா,வெறுக்கிறாயா என்பதுமில்லியன் டாலர்கேள்வியாகவே இருக்கிறது!* தேளுக்கு விஷம் போலஉனக்கு மவுனம்...* மவுனம் எனும்மின்சார வேலிக்குஉள்ளே நீபத்திரமாக இருக்கிறாய்!* உன் மவுன மொட்டுகள்எப்போதுவார்த்தை பூக்களாகமாறும்?* என் ஆசைகள் பஞ்சுப்பொதிஉன் மவுனம் தீப்பொறி!* சொற்களைமவுனத்துக்குள்ளும்,காதலை மனதுக்குள்ளும்ஏன் மறைத்தே வைக்கிறாய்?* உன் மவுனக்கடலில்என் காதல்பனிப்பாறை போல்மிதக்கிறது!* உன் மவுனம் எனும்சிலந்தி வலையில்என் காதல் பூச்சிஅடிக்கடி மாட்டிக் கொள்கிறது!* வெறுப்பையும்,மறுப்பையும் விடமவுனம்நல்லதுதான்!* எனினும்நல்ல பதில்கிடைக்குமென்றுநானும்காத்திருக்கிறேன்மவுனமாக!— எம்.ஸ்ரீராம், சென்னை.