கவிதைச்சோலை!
களவாடிய கள்ளா....* உளவு பார்த்துஉள்ளே வந்தாய்...உள்ளத்தைக்களவாடினாய்!* கனவுகளில்முத்தமிட்டு...காமக் கள்கனிய வைத்தாய்!* நனவுகளில்சீண்டாதிருந்து...கனவுகளில்தீயாக்கினாய்!* காதற் கள்சுவையளித்துபேதையுள்போதையாக்கினாய்!* நெஞ்சுக்குள்தீப்பிடித்தும்கைப்பிடிக்கத்தாமதிக்கிறாய்!* காதல் வரம்கேட்டிருந்தாய்...வசிப்பதற்கோகாக்க வைக்கிறாய்!* கண்ணனாகலீலையாடி...கள்வனாககாணாமல் போகிறாய்!* களவாடியவனே...கன்னி பெண்காதற் கள்ளனே...பொறுத்தது போதுமடா...பொறுப்பாகக்கைப்பிடியடா!— பி.கீர்த்தனா, சென்னை.