கவிதைச்சோலை - ஐந்தெழுத்து!
* ஒரு ஐந்தெழுத்து வார்த்தை...அந்த வார்த்தை எனும்தண்டவாளத்திலேயேஎல்லாரின் வாழ்க்கைரயிலும் ஓடி கொண்டிருக்கிறது!* அதனால் தான்உலகம் விடிகிறது...இயற்கை தன்னைபுதுப்பித்துக் கொள்கிறது!* சூரிய ஒளியால்இயற்கை புத்துயிர்பெறுவது போல —* ஓடும் நதிகள் யாவும்சமுத்திரத்தைஅடைவது போல —* உணவைத் தேடிஎறும்புகள் ஊர்வலம்தொடங்குவது போல —*இந்த வார்த்தையை பின்பற்றிமனிதகுலம் அடிக்கடி தன்னைஉயிர்ப்பித்துக் கொள்கிறது!* வலிகளும், வேதனைகளும்ரத்தமும், மரணங்களும்நிறைந்த வரலாற்றைதாங்கிக் கொள்ளவும் —* நிகழ்காலத்தையும்,எதிர்காலத்தையும்வலிமையோடு எதிர்கொள்ளவும்இந்த வார்த்தையேபயன்படுகிறது!* மரணத்திடம் மாட்டிக் கொண்டுபோராடுபவர்களுக்கும்,சோதனைகளால் வருந்துபவர்களுக்கும்,வேதனையால் துடிப்பவர்களுக்கும்இந்த வார்த்தையேவேத வாக்கு!* தொடர் துன்பங்களால்இந்த வார்த்தையைமறந்தவர்கள் உண்டு!* அவர்களையும் இந்தவார்த்தை எங்கோ ஒளிந்திருந்துகாப்பாற்றிக் கொண்டிருக்கிறது!*அந்த வார்த்தைக்குஅழிவே இல்லை...அது அழிந்தால்உலகமே இல்லை!*அந்த வார்த்தை...நம்பிக்கை!— எம்.ஸ்ரீராம், சென்னை.