உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - நட்பு மேம்பட...

ஆக., 6 - நண்பர்கள் தினம்பெற்றோருக்கு அடுத்துகனத்த இதயத்தைதேற்றும் உறவாய்இருப்பது தோழமைகள் தான்!நட்பு - மனதில் இசைக்கும்மங்கள நாதம்...உன்னில் நானும்என்னில் நீயும்இணைப் பிரியாமல் இருப்பது!நண்பர்கள் சூழ இருந்தால்நரகம் கூட பூஞ்சோலையாகும்!எண்ணற்ற எதிரிகளையும்கணக்கற்ற துரோகிகளையும்எதிர்கொள்ள செய்வது நட்பு!நண்பர்களையும் - நட்பையும்வெறும் வார்த்தைகளால்அளந்து விட முடியாது - அதுமற்றொரு இதயத்தையும்தனக்கான இடத்தையும்ஆறுதலையும் பெறும்நிம்மதி தரும் சன்னிதி!ஆரவார தோழமையின்நீளமான காலங்களில்நினைவுக்கூரத்தக்கவர்கள்ஏராளம் - அவர்கள்வாழ்க்கையெனும் வங்கிக் கணக்கில்பெருஞ்செல்வ வரவுகள்!கடைப் பொருளில்மட்டுமல்ல கலப்படம்நட்பிலும் நஞ்சு போலஅமைவது துரதிருஷ்டம்!கைக் குலுக்கும் தோழர்களும்பொய்யென போவதுண்டு...வஞ்சிக்கும் நெஞ்சங்களின்விலகலின் முடிவுகளாலும்முற்று பெற்றுவிடும் நட்பு!நட்பை மதியாதார் கையில்வைரமாகவே நீ கிடைத்தாலும்மண்ணில் மறைந்திடும்கூழாங்கல்லாகவே அறியப்படுவாய்!நட்பு மேம்படகூர் வார்த்தைகளகற்றி கூட்டுத் தேனீக்களின்கொட்டிடும் தன்மையகற்றிதேனாய் சொற்கள் இனித்திடநட்பை விரிய செய்வோம்!செல்வங்கள் நிரந்தரமல்லதோழமை என்றுமே நிலையானது...கடைசி மூச்சு வரைவாழ்வில் சுகமளிக்கும்உத்தம நண்பர்களை பெறுவோம்உண்மை நண்பர்களாய் இருப்போம்!— செல்வி நடேசன்,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !