உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - தொழிலாளர்களைக் கொண்டாடுவோம்!

மே 1 - உழைப்பாளர் தினம் உலகம் இயங்கஉயிர்கள் செழிக்கஉற்பத்தி பெருகஉலகின் அச்சாணிகளாம்உழைக்கும் நம் தோழர்கள்! உழைப்பை மதித்துஉழைப்பாளிகளின்உன்னத நிலையறிந்துகோரிக்கைகளைமுன் வைத்துபோராடும் முன்னரேஅழைத்துப் பேசிஅவர்களின் மனம் குளிரவைப்போரேஉன்னத முதலாளியாய்உழைப்பாளர் கண் முன்தெய்வமாய் நிற்பர்! கூடுதல் வேலைகுறைவான சம்பளம்உழைப்பைச் சுரண்டும்முதலாளிகள்...தொழிலாளர்களின்வயிற்றில் அடிக்கலாமாவெந்த புண்ணில்வேல் பாய்ச்சலாமா? இரவு நேரப் பணிகளிலும்ஆபத்தான தொழிலகங்களிலும்கட்டுமானப் பணிகளிலும்உழைக்கும் தோழர்களேநம் உற்ற நண்பர்களாம்!உலகம் இயங்கபெட்ரோலும், டீசலும்மின்சாரமும்நிலக்கரியுடன் கூடவேநம் தொழிலாளர்களும் வேண்டும்! நமக்காக உழைக்கும்தொழிலாளர்கள்நம்முடன் கலந்துள்ளதொழிலாளர்கள்நம் குடும்பத்திலும்தொழிலாளர்கள்இவர்களுக்குநன்றி சொல்லிகொண்டாடுவோம்தொழிலாளர் தினத்தை!வி.எஸ். ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !