உள்ளூர் செய்திகள்

மழைக்கால பானம்!

மல்லி காபி!தேவையான பொருட்கள்:தனியா - 150 கிராம்சுக்கு - 50 கிராம்மிளகு - 10 கிராம்திப்பிலி - 10 கிராம்சித்தரத்தை - 10 கிராம்சதகுப்பை - 10 கிராம்பனை வெல்லம் - தேவையான அளவுசெய்முறை: பனைவெல்லம் நீங்கலாக, மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்சியில் நைசாக பொடிக்கவும். இப்பொடியை, காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.தேவையான போது, ஒரு டம்ளர் தண்ணீருக்கு, இரண்டு தேக்கரண்டி பொடி மற்றும் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டினால், மணமான மல்லி காபி தயார்!குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின், வறுக்கவும்.மசாலா பூண்டு பொரி!தேவையான பொருட்கள்:பொரி - 1 கப்வேர்க்கடலை - கால் கப்பொட்டுக்கடலை - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 2பூண்டு - 6 பல்மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகைகடுகு, எண்ணெய் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை:வாணலியில், சிறிதளவு எண்ணெயை காய விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தோலுடன் பூண்டை தட்டிப் போடவும். இதனுடன், மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரி மற்றும் உப்பு சேர்த்து, புரட்டி இறக்கவும். மழைக்காலத்தில், மாலை நேர சிற்றுண்டியாக, வீட்டில் உள்ளவர்களுக்கு இதைச் செய்து கொடுத்தால், கண் சிமிட்டும் நேரத்தில் காலியாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !