உள்ளூர் செய்திகள்

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு!

உலகின் முன்னணி நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல்வேறு புதுமையான முறைகளில், விளம்பரம் செய்கின்றன. பெரும்பாலும், பத்திரிகை, 'டிவி', ரேடியோ போன்றவற்றில் தான், விளம்பரம் கொடுப்பர். சுவர், டிஜிட்டல் திரை, போஸ்டர் போன்றவற்றின் மூலமாகவும், விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இவை அனைத் தையும், மிஞ்சும் வகையில், ஜப்பானை சேர்ந்த, சில நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்துக்கு, புதிய யுக்தியை கையாண்டு வருகின்றன.விளம்பரத்துக்காக, இவர்கள் பயன்படுத்தும் இடம் எது தெரியுமா? இளம் பெண்களின் அழகான தொடைகள் தான். நல்ல உயரம், வாளிப்பான, வழுவழுப்பான தொடைகளுடன் இருக்கும், இளம் பெண்களை அழைத்து, இந்த நிறுவனங்கள், ஒப்பந்தம் செய் கின்றன.இதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு, அந்த நிறுவனம், இளம் பெண்களின் தொடைகளில், தங்கள் பொருட்களை பற்றிய விவரங்களை, பச்சை (டாட்டூஸ்) குத்தி விடுகின்றன. சில நேரங்களில், எளிதில் அழிக்க முடியாத பெயின்டுகளாலும், பொருட்களின் விவரங்களை வரைந்து விடுகின்றன.இந்த பெண்கள், தொடை தெரியும் அளவுக்கு, உடை அணிந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வலம் வர வேண்டும். இந்த புதுமையான விளம்பரத்துக்காக, தொடையை வாடகைக்கு விடும் பெண்களுக்கு, ஒரு மாதத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் தரப்படுகிறது. அதிகம் சிரமப்படாமல், பணம் கிடைப்பதால், தொடையை வாடகைக்கு விடுவதில், ஜப்பான் இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !