உள்ளூர் செய்திகள்

எள் - சுக்கு சாதம்!

தேவையானவை: அரிசி - இரண்டு கப், எள் - இரண்டு தேக்கரண்டி, சுக்கு - ஒரு சிறிய துண்டு.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நல்லெண்ணைய் - ஒரு மேஜைக் கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை, உதிரியாக சாதமாக வடித்து கொள்ளவும். எள்ளை, கடாயில் வறுத்து, தனியாக வைக்கவும். சுக்கை தட்டி, பொடி செய்யவும்.கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, சுக்குப் பொடி, சாதம் சேர்த்து கிளறி, எள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !