உள்ளூர் செய்திகள்

நிஜம் அல்ல; நிழல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர், செர்ஜிசோலோவியாவ்; பொதுவுடைமை புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான லெனின் மாதிரியே இவர் இருப்பதால், இவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து துரத்தப்பட்டார். இன்று, மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் லெனின் நினைவிடத்திற்கு வரும் சுற்றுலா பயணியர், இவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக இவர் வசூலிக்கும் கட்டணம், ஒரு ஆளுக்கு, 110 ரூபாய்.ஏழு ஆண்டுகளுக்கு முன், தனக்கும், லெனினுக்கும் உருவ ஒற்றுமை இருப்பதை அறிந்தார். அன்று முதல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் இவரது முழுநேர வேலை. வருமானமும் நன்றாக இருப்பதாக கூறுகிறார், செர்ஜி. — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !