உள்ளூர் செய்திகள்

இவர் தான், உலகின், செக்சியான பெண்!

அமெரிக்காவில் பிரபலமான, 'எஸ்கொயர்' என்ற பத்திரிகை, 'உலகின், செக்சியான பெண் யார்' என்ற, கருத்துக் கணிப்பை நடத்தி, அதன் முடிவை, சமீபத்தில், வெளியிட்டது. இதில், பிரபல ஹாலிவுட் நடிகை, ஸ்கார்லெட் ஜொஹன்சன், முதலிடத்தை பிடித் துள்ளார். 28 வயதாகும், ஸ்கார்லெட், ஏற்கனவே, 2006ல் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலும், உலகின் செக்சியான பெண் என்ற பட்டத்தை பெற்றவர் என்பது, குறிப்பிடத்தக்கது. இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்கார்லெட், 'இதுவரை யாருமே, இரண்டு முறை, இந்த பட்டத்தை பெற்றதில்லை. நான் தான், முதல் நபர். இதனால், என் சந்தோஷத்தை விவரிக்க, வார்த்தைகளே இல்லை. இந்த நிமிடத்தில், உலகிலேயே, மிகவும் மகிழ்ச்சியான பெண் யார் என்ற ஆய்வை நடத்தினால், அதிலும், எனக்கு தான், முதலிடம் கிடைக்கும்...' என, பூரிப்புடன் கூறுகிறார்.- ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !