விசித்திர சம்பிரதாயங்கள்!
ஆண்களுக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை பிறருக்கு காட்டுவதற்காக பற்களை பேர்த்து எடுக்கும் சம்பிரதாயம், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய, சுமாத்ரா தீவு காட்டு பகுதியில் வாழும் மெண்டவாய் பழங்குடியின மக்களிடம் இருக்கிறது. கோத்திர தலைவர், 'சமான்' என்று அழைக்கப்படுகிறார். படத்தில் உள்ள தலைவரின் மேல்வரிசை பற்கள், நான்கு அகற்றப்பட்டு இருக்கிறது. இதை கண்டவுடன், திருமணம் ஆனவர் என்று தெரிந்து கொள்ளலாம்.இவர் உடலில் காணப்படும் அணிகலன்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அர்த்தம் உண்டு. இவர்களில், ஆண்களும், பெண்களும் ஓயாமல் புகை பிடித்து கொண்டே இருப்பர். இவர்கள், அரிசி உணவை தேட மாட்டார்கள். பனை மரத்தை வெட்டி, சீவி அந்த துாளை வறுத்து மாவு ஆக்கி அதை தான் உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.இவர்களிடம் இன்னொரு வித்தியாசமான பழக்கமும் உண்டு. இவர்கள், வீட்டில் உடலுறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். காட்டுக்குள் சென்று, உறவு கொண்ட பின், உடல் முழுக்க மஞ்சள் பூசி, பின்னரே வீடு திரும்புவர். — ஜோல்னாபையன்