பிரமிக்க வைக்கும் ஜனாதிபதி மாளிகை!
இந்திய தலைநகர் புதுடில்லியில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஜனாதிபதி மாளிகை, வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விட, விலை உயர்ந்த கட்டடமாகும்.வெள்ளை மாளிகையின் விலை, 258 கோடி ரூபாய் என்றால், நம் ஜனாதிபதி மாளிகை, 3,500 கோடி ரூபாய். இவ்விபரம், 'ஹாச்ட்' எனும் ரியல் எஸ்டேட் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையின் மொத்த பரப்பளவு ௩௫௦ ஏக்கர். இதில், ஐந்து ஏக்கரில் மட்டுமே கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நான்கு மாடிகள் கொண்ட இதில்,மொத்தம் 340 அறைகள் உள்ளன. கட்டடங்களுக்குள் உள்ள நடைபாதைகளின் தூரம், 2.5 கி.மீ., இங்குள்ள பூங்கா, 190 ஏக்கரில் அமைந்துள்ளது. டென்னிஸ் விளையாடும் மைதானங்கள் ஒன்பது உண்டு. கிரிக்கெட், போலோ மற்றும் கோல்ப் விளையாட, மிக பெரிய இடங்கள் உள்ளன.கடந்த, 1931ல் இம்மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, அன்றைய வைஸ்ராய்க்காக கட்டப்பட்டது. இதன் கட்டுமான வேலை, 17 ஆண்டு நடைபெற்றது.— ஜோல்னாபையன்.