உள்ளூர் செய்திகள்

ஸ்டன்ட் நடிகர் பீட்டர் ஹெய்னி!

தென் மாநில சினிமாக்களிலும், பாலிவுட் படங்களிலும் சண்டை காட்சிகள் அமைத்து, புகழ்பெற்றவர் பீட்டர் ஹெய்னி. இப்போது, ஹாலிவுட் படங்களிலும் திறமையை காட்டுகிறார். இவர், பாதி தமிழர். அம்மா, வியட்நாமை சேர்ந்தவர்; அப்பா, மதுரைக்காரர்! அப்பா, பழனி பெரிய கருப்பன், வியட்நாமில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தமிழகம் திரும்பினர். பல வேலைகளை செய்து, பிழைத்த அவர், தமிழ் சினிமாக்களில், 'ஸ்டன்ட்' நடிகராகவும் இருந்ததால், ஹெய்னிக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டது. கடந்த, 1993, சண்டைப் பயிற்சியாளரும், திரைக்கதை எழுத்தாளருமான கனல் கண்ணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், ஹெய்னி. தற்சமையம், தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி, 'ஸ்டன்ட்' மாஸ்டராக திகழ்ந்து வருகிறார்!- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !