இப்படியும் ஒரு ஆசை!
படத்தில் காணும், இந்த மூன்று பெண்களின் பெயர்கள், டோல், 30; கிடன், 27; மற்றும் யங் 34. அமெரிக்காவின் மசேசூட்ஸ் மாகாணத்தை சேர்ந்த, இந்த மூன்று பேருமே, ஓரினச்சேர்க்கை காதலிகள். மூன்று பேரும், ஒருவரை ஒருவர் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேருக்குமே, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இந்த ஆசையை, மனதுக்குள் பூட்டி வைக்காமல், நடைமுறைப்படுத்தி விட்டனர். முதல் கட்டமாக, கிடன், செயற்கை கருவூட்டல் மூலமாக கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு, இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்கப் போகிறது. இதற்கு பின், மற்ற இருவரும், குழந்தை பெற்று கொள்ளப் போகின்றனராம்!- ஜோல்னாபையன்.