உள்ளூர் செய்திகள்

பாதிக்கிணறு!

'இது நமக்கு நன்மையைத் தரும்...' என்ற எண்ணத்தில், ஏதாவது ஒரு செயலைச் செய்யத் துவங்குகிறோம். ஏதாவது ஒரு வடிவத்தில் இடையூறு வந்து குறுக்கிட்டால், உடனே அந்தச் செயலை அப்படியே விட்டுவிட்டு, வேறொரு செயலைச் செய்யத் துவங்குகிறோம். அங்கும் தடை ஏற்பட, அதை விட்டுவிட்டு அடுத்ததாகச் செய்யத் தாவுகிறோம்.இப்படியே போய்க் கொண்டிருந்தால்...முரன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனிடம், ஆற்றலும் அறிவும் நிறைந்திருந்தன. எந்தவொரு செயலைச் செய்ய முனைந்தாலும், அதைப்பற்றி நன்கு ஆலோசித்து-, ஆராய்வான்.- பின் விளைவுகள், பக்க விளைவுகள் பற்றி அறிந்து, அதன் பின்னரே தான் செய்ய எண்ணிய செயலைச் செய்யத் துவங்குவான்.இப்படி ஆராய்ந்து செயலையும் துவங்குவானே தவிர, மன உறுதி இல்லாமையால் அதை முழுமையாக முடிக்க மாட்டான்; பாதிக்கிணறு தாண்டிய கதை தான்.தீய குணங்களின் விளைவால், தேவேந்திரனுடன் போர் தொடுப்பதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கினான், முரன். வழக்கம்போல பாதியிலேயே திரும்பினான். திரும்பியது மட்டுமல்ல, தன்னைப் போலவே தீய குணங்கள் நிறைந்தவனும், தேவேந்திரனுடன் போர் தொடுப்பதில் மும்முரமாக இருந்தவனுமான நரகாசுரன் என்பவனிடம் மந்திரியாகச் சேர்ந்தான்.தேவேந்திரனுக்கு நரகாசுரன் தாளாத துயர் விளைவித்தபோது, கண்ணனே போரில் இறங்கினார். அதன் விளைவாக, நரகாசுரன் மட்டுமல்ல, முரனும் சேர்ந்தே இறந்து போயினர்.தகுதி, திறமை, ஆற்றல், அறிவு என எல்லாம் இருந்தாலும், மன உறுதி இல்லாவிட்டால் உண்டாகும் விளைவைக் கூறும் கதை இது.பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!வீட்டில் விக்ரகம் வைத்து வழிபடுபவர்கள், குடும்பத் தலைவரின் கட்டை விரல் உயரம் உள்ள விக்ரகத்தை வைத்தே வழிபட வேண்டும். சிலைகளின் உயரம் அதிகமாக இருந்தால், முறையாக அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !