தவிக்கிறேன்! (கவிதைச் சோலை)
* பள்ளி விடுமுறையில்கட்டிய மணல் வீட்டில்காதலை நாம்குடியேற்றவில்லை...* பக்கத்து ஊர்மேல்நிலைப் பள்ளிக்குஒரே சைக்கிளில்சேர்ந்து சென்றபோதுகாதலும், 'கேரியரில்'அமர்ந்து வந்திருக்கலாம்...* 'பயாலஜி' பாடம்பிராக்டிகலுக்கு...எனக்காக நீஎலி பிடித்தாய்...பூப்பறித்தாய்...படம் வரைந்தாய்...* எலியும்... பூவும்...படமும்... என்நெஞ்சினுள்நிழலாடியது...இரவு முழுக்கஉன் நினைவுகளில்உறவாடியது...* வேறு வேறுகல்லூரிகளுக்குஇடம் பெயர்ந்த போதும்இடம் பெயரவில்லைஎன் மனதில் காதல்...* இடமாற்றத்தில் நீதடுமாறி விட்டாய்...தடம் மாறி விட்டாய்...விசாரித்ததில்... உன்வகுப்புத் தோழிநெருக்கத்தில்... நீஎன்னை மறந்ததுதெரிய வந்தது...* காதல் கனவுகளுடன்கால் வைத்த பூக்காடுஉன்னால் - கருகிநெருஞ்சி முள் காடானது...* நெஞ்சம் முழுக்கநேசத்துடன் - நான் கொண்டஉன்னுடனான காதல்நெருஞ்சி முள் காட்டில்கால் வைத்தகதையாகிப் போனது...* என்னால் வைத்த அடியைஎடுக்கவும் முடியவில்லை...அடுத்த அடியைவைக்கவும் முடியவில்லை...ரத்தம் வழியும்ரணமான பாதங்களுடன்...* தவிக்கிறேன் நான்...!— க.ரஞ்சனா, கோவை.* * *