தபேலா இசைக்கலைஞர் ரத்னஸ்ரீ!
ரத்னஸ்ரீ அய்யர் என்ற, 32 வயது பெண்மணி, சிறந்த தபேலா கலைஞராக இருக்கிறார். ஆறாவது படித்த போது, வீட்டில் இருந்த தபேலாவில் விரல்களை ஓடவிட்ட இவர், இன்றும் விரல்களின் வேகமான அசைவுகளை நிறுத்தவில்லை. எம்.எஸ்சி.,யில் கல்லூரியில் முதலாவதாக வந்து, தற்காலிகமாக கல்லூரி ஆசிரியை ஆனார். ஆனால், 'இது, தன் துறை அல்ல...' என்று உணர்ந்து, தபேலாவில் டிப்ளமோ பெற, ஹைதராபாத் சென்று, வாராங்கல் வித்யாரண்யா கல்லூரியில் பயிற்சி பெற்றார்.இன்று நாட்டிலேயே சிறந்த தபேலா கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். கோட்டயம் வைக்கத்தை சேர்ந்த ராமசந்திர அய்யரின் ஏழு மகள்களில் இளையவரான இவர், உலகம் முழுவதும் உள்ள மேடை களில், தபேலா இசைத்து, ரசிகர்களை மகிழ வைக்கிறார்.— ஜோல்னாபையன்.