உள்ளூர் செய்திகள்

காகத்தின் நட்பு!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர், பிரசாத். அரசு பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். இவர் ஓட்டும் பேருந்து, எர்ணாகுளம் பஸ் நிலையம் வரும்போது, காகம் ஒன்று அவருக்காக காத்திருக்கும். இவர்கள் நட்பு, பயணிகளையும் குதுாகலப்படுத்துகிறது.இந்த பேருந்து வந்து நின்றவுடன், மரத்திலிருந்து பறந்து வந்து பேருந்தின் கதவு மீது உட்கார்ந்து, குரல் எழுப்புகிறது, காகம். அவர் வாங்கி வந்த உணவை வைத்ததும், சாப்பிடுகிறது. காகத்திடம் அவர் பேசும்போது, பதில் கூறுவது போல், குரல் எழுப்புகிறது. பேருந்து கிளம்ப, அங்கிருந்து பறந்து மரத்தில் அமர்ந்து கொள்கிறது.'காகத்திடம் நட்பு ஏற்பட்டதிலிருந்து விடுமுறை எடுப்பதே இல்லை...' என்கிறார், பிரசாத். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !