யானைக்கு வந்த சோதனை!
யானைக்கு நீளமான தந்தங்கள் இருந்தால், அழகு மட்டுமல்ல, கம்பீரமும் கூட. ஆனால், மிக நீளமான தந்தங்கள் அவற்றின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு, சிரமத்தையும் அளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள கபினி நதிக்கரையில், தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை தான், இது.'இந்த யானையின் நீளமான தந்தங்களால் ஏற்படும் இடைஞ்சல்களுக்கு, விரைவில் தீர்வு காணப்படும்...' என்கின்றனர், வன இலாகா அதிகாரிகள். — ஜோல்னாபையன்