காதிலும் விளக்கு எரிய விடலாம்!
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபலமான ஆபரண வடிவமைப்பாளர், டயானா கால்டரெஸ்க்யூ. இவரது வடிவமைப்புகள், அமெரிக்காவில் மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலம். சமீபத்தில் வித்தியாசமான காதணியை வடிவமைத்துள்ளார், இவர். வீடுகளில் தொங்க விடும் சர விளக்குகள் போன்ற தோற்றத்தில் இந்த காதணி உள்ளது. காதணி அசையும் போதெல்லாம், அதில் உள்ள எல்.இ.டி., விளக்குகள் எரியும். இதற்காக, அந்த காதணியில் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பித்தளை, கண்ணாடி மற்றும் சிறிய அளவில் தங்கம் ஆகியவற்றை சேர்த்து, இந்த காதணி வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 15 ஆயிரம் ரூபாய்க்கு இது விற்பனையாகிறது. ஆனால், இதில் பொருத்தப்பட்டுள்ள, எல்.இ.டி., விளக்கிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.— ஜோல்னாபையன்