உள்ளூர் செய்திகள்

அமைதி இழந்த கோடீஸ்வரன்!

படத்தில் இருப்பவர் பெயர், அனுப். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். கேரள அரசு நடத்தும் லாட்டரியில், பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் இவருக்கு கிடைத்துள்ளது. 66 லட்சத்து 55 ஆயிரத்து 914 பேர் டிக்கெட் வாங்கியிருந்தனர்.இவருக்கு முதல் பரிசு கிடைத்தாலும், கைக்கு வந்தது 15.45 கோடி ரூபாய் மட்டும் தான். அதாவது, அரசுக்கு, 6.75 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும். அத்துடன், 2.5 கோடி ரூபாய், ஏஜன்டுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். பரிசு விழுந்த செய்தி அறிந்து பலர், உதவி கேட்டு தொல்லை செய்ததோடு, பணம் கேட்டு மிரட்டினர்.'பணம் கிடைத்தும் அமைதி இழந்து தவிக்கிறேன்...' என்கிறார், இந்த கோடீஸ்வரன்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !