உலகின் மிக அழகான பெண்!
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பீப்பிள்' என்ற பிரபல பத்திரிகை நிறுவனம், இணையம் மூலமாக நடத்திய கருத்துக் கணிப்பில், உலகின் மிக அழகான பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார், ஹாலிவுட் நடிகை ஜெனீபர் அனிஸ்டன். அம்மணிக்கு, 42 வயதாகி விட்டது. ஆனாலும், தன் அழகிய தோற்றத்தாலும், நடிப்பாலும், ஹாலிவுட் ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார்.இந்த பெருமை, ஜெனீபருக்கு, அத்தனை எளிதாக கிடைத்து விடவில்லை. தன் அழகை பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஆண்டுக்கு, 75 லட்ச ரூபாய் செலவழிக்கிறாராம். ஜெனீபரின் கூந்தல் அழகு தான், பெரும்பாலான ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளதாம். இதனால், தன் கூந்தல் அழகை பராமரிப்பதற்கு மட்டும் அதிக அளவில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார்.— ஜோல்னாபையன்.